அமெரிக்காவின் கப்பல்களை அழிப்போம்: புதிய அறிவிப்பை வெளியிட்ட ஹவூதிகள்

Date:

செங்கடலில் ஹவூதிகள் கிளர்ச்சியாளர்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால் அதன் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஹூவுதிகள் எச்சரித்துள்ளனர்.

யேமனின் ஈரானுடன் இணைந்த ஹவூதிகள்  செங்கடலில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர்க் கப்பல்களைத் தொடர்ந்து குறிவைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஹவூதி கிளர்ச்சியாளர்கள் குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர், அல்-மஸ்சிரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கிரேவ்லி (USS Gravely) மீது ஹவூதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்தியதாக செங்கடலில் உள்ள அமெரிக்க பாதுகாப்பு இராணுவம் தெரிவித்துள்ளது.

யேமனின் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவூதிகள் , காசா போரில் பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக செங்கடல் மற்றும் அதன் ஊடாக பயணிக்கும் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.

யேமனில் உள்ள ஹவூதிகள் இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், ஹவூதிகள் கிளர்ச்சியாளர்களை பயங்கரவாதிகளாகவும் அறிவித்துள்ளனர்.

ஹவூதிகள் கிளர்ச்சியாளர்களின் அறிவிப்பால் செங்கடலில் எதிர்வரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...