அரச மருத்துவப் பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில்!

Date:

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (09) காலை 08.00 மணிக்கு அரச வைத்தியசாலைகளில் மருத்துவப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் சில கொடுப்பனவுகளை உயர்த்தும் தீர்மானத்திற்கு எதிராகவும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வைத்தியர்களுக்கான Disturbance, Availability & Transport (DAT) கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, (DAT) கொடுப்பனவை ரூ.35,000 வில் இருந்து 70,000 ரூபாவாக அதிகரிக்கவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆய்வுக் கொடுப்பனவை 25% இனால் அதிகரித்து ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கவும் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Popular

More like this
Related

நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் மனிதாபிமானமற்ற தாக்குதல்: அல் ஜஸீரா ஊடகவியலாளர் நால்வர் பலி

காசாவில் தொடர்ந்தும் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட குறைந்தது...

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்காக நடமாடும் சேவை!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஹாயில் பிராந்தியத்திற்கான நடமாடும்...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு : 35 வருட புதைகுழியைத் தோண்டுவதற்கு நீதிமன்று அனுமதி்

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் போது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட 168...