கத்தாரில் நடைபெறவுள்ள ஆசியாவின் தேசிய கால்பந்து போட்டியில் பலஸ்தீன அணி, அதன் முதல் ஆட்டத்தில் ஈரானுடன் மோதவுள்ளது.
ஆசியாவின் கால்பந்து அணிகளுக்கான ஆசிய கிண்ணப் போட்டி ஜனவரி மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
ஆனால், காஸா போரால் ஜனவரி 14ஆம் திகதி நடக்கவிருக்கும் இந்த ஆட்டத்தில் கவனம் செலுத்த பலஸ்தீன அணி சிரமப்படுகிறது.
காஸா போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் அதில் பலஸ்தீன விளையாட்டாளர்கள் சிலரின் குடும்பத்தாரும் அடங்குவர்.
“பயிற்சிகளுக்கு முன்னரும் பின்னரும் பேருந்தில் பயணம் செய்யும்போதும் ஹோட்டலில் இருக்கும்போதும் அனைவரும் செய்திகளைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்,” என்றார் பலஸ்தீன அணியின் பயிற்றுவிப்பாளர் மக்ராம் டபூப் தெரிவிக்கிறார்.
பலஸ்தீன அணி அந்நாட்டில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தங்கள் குடும்பத்தாரை நினைத்து விளையாட்டாளர்கள் எப்போதும் கவலையுடன் இருக்கின்றனர்.
சில பாலஸ்தீன விளையாட்டாளர்களின் குடும்பத்தார் காஸாவில் சிக்கியுள்ளனர். அவர்களின் வீடுகளும் அழிந்துபோய்விட்டன.” எனவும் அவர் கூறினார்.
எனினும், நெருக்கடியான காலத்திலும் ஆசிய கிண்ணப் போட்டியின் முதல் சுற்றிலிருந்து முன்னேறி பலஸ்தீன கால்பந்துக்குப் பெருமை சேர்க்கும் எண்ணத்துடன் தனது அணி இருப்பதாக டபூப் சுட்டிக்காட்டினார்.