இனி வாகன சாரதிகள் சி.சி.டி.வியில் கண்காணிக்கப்படுவார்கள்!

Date:

வீதி ஒழுங்கு விதிகளை மீறுகின்ற வாகன சாரதிகள் இனி சி.சி.டி.வியில் கண்காணிக்கப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அதிகமான விபத்துக்கள் மற்றும் விதி மீறல்கள் இடம்பெறுவதால் அதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விதிகளை மீறுகின்ற சாரதிகளுக்கான அபராத சீட்டு, அந்தந்த வாகன உரிமையாளரின் பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 22ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...