செங்கடல் பகுதியைக் கடக்கும் “இஸ்ரேலியக் கப்பலில்” ஒரு சிறப்புப் படை விமானத்தை தரையிறக்கி பணியாளர்களை கட்டுப்படுத்தும் காட்சிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இருப்பதாக கூறிக்கொள்ளும் இரான் ஆதரவுப்பெற்ற ஹவுதி குழுவினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு கப்பல்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
ஹமாஸ் மற்றும் பலத்தீனர்களுக்கு தாம் ஆதரவளிப்பதை வெளிப்படுத்த, இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே தாக்கி வருகிறோம் என ஹவுதி கூறியுள்ளது.
வணிக கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
இதேவேளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியைக் கடக்கும் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களால் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.