அரச பல்கலைக்கழகங்களில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்!

Date:

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், “பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு” எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதுடன் இன்றையதினம்  பல்கலைக்கழகங்களின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் கடந்த 14ஆம் 15ஆம் தினங்களில் இடம்பெற்ற கூட்டங்களின் தீர்மானத்திற்கமைவாக 16ஆம் திகதி கல்வி அமைச்சருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இன்று அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் உடனடித் தீர்வினை வேண்டியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினையும் நடாத்துவதுடன் தொடர்ந்து விசேட பொதுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...