இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் முன்னெடுப்பைப் பாராட்டி சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் கடிதம்!

Date:

காசா மற்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்ததாக கூறப்படும் இனப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த தென்னாபிரிக்காவின் துணிச்சலான முயற்சிக்கு ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து, சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் தலைவர் உமர் காமில், இலங்கைக்கான தென்னாபிரிக்க குடியரசின் உயர்ஸ்தானிகர் மேதகு சாண்டில் எட்வின் ஷால்க்குக்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பியுள்ளார்.

இனப்படுகொலை, நிறவெறி, போர்க்குற்றங்கள், காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பொதுமக்களுக்கு எதிரான பிற மீறல்கள் போன்ற தீவிரமான அவலங்களை நிவர்த்தி செய்வதற்கான முக்கியமான தேவைக்கு உலகளாவிய அங்கீகாரத்தை வலியுறுத்தி, தென்னாப்பிரிக்கா முன்னெடுத்த நேர்மையான முயற்சிகளுக்கு அனைத்து அரபு/முஸ்லிம் நாடுகளும் ஒருமனதாக ஒப்புதல் அளித்ததை இந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள அவர், சர்வதேச நீதிமன்றத்தின் முன் இஸ்ரேல் அரசைக் கொண்டுவருவதற்கான தென்னாப்பிரிக்காவின் அர்ப்பணிப்பு, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக அமைந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

காசா மற்றும் மேற்குக் கரையில் உடனடி போர் நிறுத்தத்திற்கான அவசர அழைப்பு குறித்த உடனடி நீதிமன்றத் தீர்ப்புகளுக்காக சர்வதேச சமூகம் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த சட்ட நடவடிக்கைகள் நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு நியாயமானதும் நீதியானதுமான தீர்வு காண வழி வகுக்கும் என உமர் காமில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மாண்புமிகு சாண்டில் எட்வின் ஷால்க்கின் தலைமைத்துவத்தையும், சர்வதேச அரங்கில் நீதியைக் கோருவதில் தென்னாப்பிரிக்காவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கின்ற அதேவேளை, தென்னாப்பிரிக்கா எடுத்துள்ள கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கும் இந்த அழுத்தமான பிரச்சினைக்கு தீர்வுகாண மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கும் அவர் இந்தக் கடிதத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

“பாலஸ்தீனியர்களின் சுதந்திரம் இல்லாமல் நமது சுதந்திரம் முழுமையடையாது” என்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, சுதந்திரம் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை அவர் அக் கடிதத்தில் எடுத்துக் காட்டியிருந்தார்.

92 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இனப்படுகொலை குறித்து கவலை வெளியிட்டுள்ள ஒமர் காமில், சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுகளையும் தென்னாப்பிரிக்கா நடவடிக்கைகளைத் தொடங்குவதையும் சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையம் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட செயல்முறைகள் நீடித்த போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்பது எங்களதும் உங்களதும் அபிலாஷையாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஒமர் காமில் அவர்கள், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான தென்னாப்பிரிக்காவின் அர்ப்பணிப்புக்கு ஆழ்ந்த நன்றியையும் இந்தக் கடிதத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...