ஊழல் வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Date:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான்  தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் புதன்கிழமை (31) தீர்ப்பை வழங்கியது.

அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரச இரகசியங்களை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சைபர் மோசடி வழக்கில் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவாகர அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை (30) விதிக்கப்பட்டது.

நீதிமன்றின் இந்த தீர்ப்புகளானது பெப்ரவரி 8 பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளன. 2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார்.

சைபர் வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.

இந் நிலையில் புதிய நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அமைவாக இம்ரான் கானின் தண்டனைகள் தொடர்ச்சியாக அல்லது ஒரே நேரத்தில் வழங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...