சமூக ஊடகங்களில் 100,000ற்கும் அதிகமான ஆபாச காணொளிகள்: சிறுவர்கள், இளம் பெண்கள் கடுமையாக பாதிப்பு

Date:

கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு நபர்கள் 100,000க்கும் மேற்பட்ட, சிறுவர்கள் மற்றும் இளம் யுவதிகளின் அந்தரங்க காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இந்த காணொளிகள் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் அவர்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவதாகவும் சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்தக் காணொளிகளைப் பதிவேற்றியவர்களைக் கண்டறிந்து கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், சில தொழில் வல்லுநர்கள் கூட இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது.

இருப்பினும், இந்த செயல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இவ்வாறான சம்பவங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த வருடத்தில் பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்த உள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...