தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா!

Date:

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16வது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக  ஒலுவில்  வளாக  மாநாட்டு  மண்டபத்தில்  பெப்ரவரி மாதம்   சனிக்கிழமை ( 10) , ஞாயிற்றுக்கிழமை (11)  இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா  தலைமையில் இரண்டு நாட்களும் தலா 3 அமர்வுகளாக  மொத்தமாக ஆறு அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு நடைபெறவுள்ளதாக  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்துள்ளார்

முதலாவது  நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தினைச்  சேர்ந்த 342 மாணவர்களும், இரண்டாவது  அமர்வில்  இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடங்களைச் சேர்ந்த 355 மாணவர்களும் ,மூன்றாவது அமர்வில்  பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளுக்கு பட்டங்கள்  வழங்கப்படவுள்ளன.

இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை (11) நான்காவது அமர்வில்  முகாமைத்துவ வர்த்தக பீடத்தைச் சேர்ந்த 314 பட்டதாரிகளும், ஐந்தாவது அமர்வில் கலை கலாசார பீடங்களைச்  சேர்ந்த  வெளிவாரி பட்டதாரிகள் 350 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஆறாவது   அமர்வில்   கலை  கலாசார  மற்றும்  முகாமைத்துவ   பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 361 பேருக்கு  பட்டங்கள்  வழங்கப்படவுள்ளதாகவும்  1414 உள்வாரி பட்டதாரிகளும், 711 வெளிவாரி பட்டதாரிகளுக்குமாக மொத்தம் 2152 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்...

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...