தொடர் கன மழை காரணமாக சென்னை புத்தகக் கண்காட்சி இன்று (08) ஒருநாள் மட்டும் நடைபெறாது என பபாசி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று கனமழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் நகரின் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் முதல் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் கன மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மழை சமாளிக்கக்கூடிய அளவில்தான் இருக்கப் போகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக சென்னையில் நடைபெற்று வரும் 47 வது புத்தகக் கண்காட்சி இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறாது என பபாசி தலைவர் அறிவித்துள்ளார். சென்னையின் 47வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் கடந்த மூன்றாம் தேதி துவங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.