நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மாத்தளை உக்குவெல – பண்டாரபொல வீதி, பல்லேபொல – கொஹொல்லன்வல வீதி ஆகியவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.
மேலும், லக்கல – ரிவஸ்டன் வீதி ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.