நாளை முதல் வைத்தியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு !

Date:

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை இந்த மாதம் முதல் 35,000 ரூபா முதல் 70,000 ரூபா வரை அதிகரிப்பதாக அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது.

எவ்வாறாயினும், குறித்த மேலதிக கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு தற்சமயம் அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் அடிப்படையில், தாம் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதேநேரம், வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென கோரி, தாதியர்கள், ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் என சுமார் 70இற்கும் அதிகமான மருத்துவ துறைசார் தொழிற்சங்கத்தினர் அண்மையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...