பல நகரங்களுக்கான சேவையை நிறுத்திய ‘ஓமன் ஏர்’

Date:

ஓமான் அரசுக்கு சொந்தமான ‘ஓமன் ஏர்’ அதன் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக சில தெற்காசிய நகரங்களுக்கான விமான சேவையினை இரத்து செய்துள்ளது.

இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த நிதி செயல்திறனை மேம்படுத்துவதையும், வளர்ந்து வரும் போட்டி சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டது என விமான நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய திட்டத்தின்படி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், இலங்கையின் கொழும்பு மற்றும் பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் இரத்து செய்யப்படும்.

எவ்வாறெனினும், விமான நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டிற்கு ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கும்.

மற்றும் இந்தியாவில் லக்னோ, உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவின் திருவானந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கான மேலதிக விமான சேவையையும் குறித்த நிறுவனம் ஆரம்பிக்கும்.

இது தவிர மேலும் பல பகுதிகளுக்கும் சேவையினை விஸ்தரிக்க ஓமன் ஏர் திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...