பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Date:

பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்களை தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் , குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் ஆறாம் தரத்திற்கு மாணவகளை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நடைபெறும் எனவும் குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் (உயர்தரம் உட்பட) பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், அந்த பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பின், அதிபர்களின் நேர்காணலின் மூலம் மாணவர்களின் பட்டியலை கல்வி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...