புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாக பண அனுப்பல் அதிகரிப்பு

Date:

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாக கடந்த ஆண்டு (2023) மொத்தம் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57.5% அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறித்த அறிக்கையின் படி 2023 டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இலங்கை மொத்தம் 569.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈர்த்துள்ளது.

2002 ஆம் ஆண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட தொகை 3,789.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தது.இந் நிலையில் அதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார குறிகாட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நேர்மறையான அறிகுறிகளைக் காட்டியுள்ளன.

70% க்கும் அதிகமான பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக முத்திரை குத்தப்பட்ட இலங்கை, 2023 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் பணவீக்கத்தை சுமார் 3% ஆகக் குறைத்தது.

2024 ஆம் ஆண்டில் பணவீக்கம் 5% விடவும் குறைந்த வீதத்தில் நிர்வாகிக்கப்படும் என்றும் மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.

இது தவிர, சுற்றுலா பயணிகளின் வருகையும் 2023 ஆம் ஆண்டில் 1.5 மில்லியனைத் தொட்டது மற்றும் அதன் மூலமான வருவாய் 2.068 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...