நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக முப்படைகள் அணிதிரட்டப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வைத்தியரல்லாத ஊழியர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.