நாட்டின் பல பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது இதன் காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில்,
வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போதைய மரக்கறிகளின் விலை உயர்ந்துள்ளது என்று குறிப்பிடலாம்.
அதற்கமைய, கோவா ஒரு கிலோகிராம் 470 முதல் 490 ரூபா வரையிலும், கரட் ஒரு கிலோகிராம் 660 முதல் 680 ரூபா வரையிலும், பீட்ரூட் ஒரு கிலோகிராம் 350 முதல் 370 ரூபா வரையிலும், தக்காளி ஒரு கிலோகிராம் 400 முதல் 450 ரூபா வரையிலும், போஞ்சி ஒரு கிலோகிராம் 600 முதல் 650 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இக்காலப்பகுதியில் மரக்கறி வகைகளின் விலை வீழ்ச்சி காணப்பட்டிருக்கும். ஆனால், இந்த வருடத்தில் இவ்வாறு மரக்கறி வகைகள் விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .