ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் துமிந்த சில்வா

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலை பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

துமிந்த சில்வா ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் நீதிமன்றம் உள்ளிட்ட உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் துமிந்த சில்வாவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், துமிந்த சில்வாவுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியர் திணைக்களத்தின் கோரிக்கையை மீறி அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சிபாரிசு செய்திருந்தார்.

துமிந்த சில்வாவின் வைத்தியர்களின் சிபாரிசுகளுக்கு அப்பால் செல்வதற்கு விசேட வைத்தியர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு சட்டவிரோதமானது எனவும், அவருக்கு மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் நேற்று சிறப்பு தீர்பொன்றை அளித்துள்ள பின்புலத்திலேயே துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...