இஸ்ரேலின் மூன்று மாதகால தாக்குதலுக்கு பின்னர் ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல மாதங்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு ஹமாஸ் அமைப்பு பலத்துடன் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
20 முதல் 30 சதவீத போராளிகளை மட்டுமே ஹமாஸ் அமைப்பு இழந்துள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பு இன்னும் வலுவுடன் உள்ளதாகவும் தனது தந்திரங்களை மாற்றியமைந்து தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களாக நடைபெறும் போரில் தமது தாக்குதல்களில் 16 ஆயிரம் ஹமாஸ் போராளிகள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனினும் 10 ஆயிரத்து 500 முதல் 11 ஆயிரத்து 700 வரையான போராளிகளே காயமடைந்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் விரைவில் போர் களத்திற்கு திரும்பலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.