ஹமாஸ் நிபந்தனைகளை ஏற்க மறுத்த நெத்தன்யாஹூ: பணயக்கைதிகளை விடுவிக்கும் சாத்தியமில்லை

Date:

இஸ்ரேலுக்கு எதிரான போரை நிறுத்த ஹமாஸ் அமைப்பு விதித்துள்ள நிபந்தனைகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ நிராகரித்துள்ளார்.

போரை நிறுத்தவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் நிபந்தனைகளை விதித்திருந்தது.

காஸா நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேலியப் படையினர் முற்றாக வெளியேற வேண்டும் எனவும் காஸாவின் தமது அமைப்பே அதிகாரத்தில் இருக்க வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், காஸாவின் தென்பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகர் மீது இஸ்‌ரேலியப் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டு தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி சமி அபு சுரி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்

இஸ்‌ரேல் தொடர்ந்தும் நடத்தி வருவதன் காரணமாகவும் ஹமாஸ் விதித்த நிபந்தனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாலும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில், ஹமாஸ் அமைப்பின் நிபந்தனைகளை ஏற்றால், போரில் இதுவரை கொல்லப்பட்டுள்ள இஸ்‌ரேலிய படையினரின் மரணத்துக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை போன்ற மற்றுமொரு தாக்குதல் ஏன் மேற்கொள்ளப்படாது என்ற கேள்வியும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், ஹமாஸ் அமைப்பை முற்றாக அழித்து, பணயக் கைதிகளை மீட்பதே தமது இலக்கு எனவும் நெத்தன்யாஹூ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பணயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பணயமாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் கடும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...