12 வயதிற்குட்பட்ட தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொட்டாராமுல்லை அல்ஹிரா பாடசாலை மாணவர்கள் தெரிவு!

Date:

12 வயதின் கீழ் பாடசாலைகள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொட்டாராமுல்லை அல்ஹிரா பாடசாலையில் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் Renown உதைபந்து அகடமியின் ஆதரவுடன் 12 வயதிற்குட்பட்ட பாடசாலைகள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கான (ஆண்கள்) வீரர்கள் தெரிவு நேற்று (22) கொழும்பு Racecourse மைதானத்தில் காலை 7 மணி முதல் நடைபெற்றது.

இந்த தெரிவுக்காக ஒரு பாடசாலையில் இருந்து 2012/2013 ஆம் ஆண்டுகளில் பிறந்த சிறந்த வீரர்கள் இருவர் தெரிவு செய்து அனுப்பப்பட்டனர்.

இதேவேளை  ‘எமது பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த M. M. Mohammed Sakeef மற்றும் T. Safeen Ahmed ஆகிய இரண்டு மாணவர்களும்  தேசிய அணிக்கு தெரிவாகி பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்து தந்திருக்கின்றார்கள் என  பாடசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...