ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியினால் கொழும்பு, நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு – நகர மண்டப பகுதியில் இருந்து குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்தது.முன்னதாக, இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு மூன்று நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட கட்சியின் செயற்பாட்டாளர்களை பிரதிவாதிகளாக பெயரிட்டு மாளிகாவத்தை காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.