கெஹெலியவுக்கு எதிராக மலர் வளையம், உருவ பொம்மையுடன் போராட்டம்!

Date:

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர் வளையங்கள், மற்றும் உருவப்பொம்மைகள் போன்றவற்றை வடிவமைத்து தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் சுகாதார துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலியவே பதில் கூற வேண்டும் என தெரிவித்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் கெஹிலிய கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்துவதற்கு கலகத் தடுப்பு பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...