ஜனவரி மாத பணவீக்கம் சுமார் 7% ஆக உயரலாம்: மத்திய வங்கி

Date:

வற் வரி அதிகரிப்பின் காரணமாக ஜனவரி மாத பணவீக்கம் சுமார் 7% ஆக உயரலாம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வௌியிட்ட மத்திய வங்கி ஆளுநர், “கடந்த மாதம் 4% ஆக இருந்த பணவீக்கம் வற் வரி மற்றும் வானிலை காரணமாக இவ்வாறு அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

“எதிர்காலத்தில், பணவீக்க இலக்கு 5% ஆகும். சராசரி மதிப்பை 4% – 6% வரை பராமரிக்க எதிர்பார்க்கிறோம்.

எனவே, இந்த நேரத்தில், சந்தை வட்டி விகிதங்களை ஏதாவது ஒரு வழியில் சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வட்டி விகிதம் நிலையானதாக உள்ளது. அதுவரை கொள்கை வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்போம்.” என்றார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...