ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் திலித் ஜயவீர: நிறுவன பதவிகளிலிருந்து இராஜினாமா!

Date:

பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீர, 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

‘தெரண’ தொலைக்காட்சியை நடத்தி வரும் ‘பவர்ஹவுஸ்’ நிறுவனம், ‘அருண’ நாளிதழை நடத்தி வரும் ‘லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ உள்ளிட்ட 24 நிறுவனங்களில் இருந்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.

முழு நேர அரசியலில் பிரவேசித்துள்ள திலித் ஜயவீர எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ‘மவ்பிம ஜனதா கட்சியின்’ தலைவராக போட்டியிட தீர்மானித்துள்ளார்.

அதற்கான பிரச்சாரங்களை அவர் நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ள பின்புலத்திலேயே தாம் வகித்த அனைத்து தலைவர் பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார்.

Popular

More like this
Related

இணையவழி வெறுப்புப் பிரசாரம்: இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான அலை!

"அறியாமையால் உருவாகும் தவறான புரிதல் பயத்தை வளர்க்கிறது, பயமே அமைதியின் மிகப்...

‘தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களுக்கு அனுமதி இல்லை’; நல்லூரில் திலீபன் சிலை அகற்றப்பட்டது குறித்து அமைச்சர் நளிந்த.

யாழ்ப்பாணம், நல்லூர் திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ...

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை அமுல்படுத்த கோரிக்கை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு...