பரீட்சார்த்திகள் எதிர்க்கொள்ளும் இடையூறுகளை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை (04) ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை மத்திய நிலையங்களில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இவர்களில் 281,445 பேர் பாடசாலை மாணவர்கள் என்பதுடன், 65531 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.

அதற்கான சிறப்பு ஒருங்கிணைப்பு பொறிமுறை தயாரிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்கள் மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கோ அல்லது பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்திற்கோ தொடர்புக் கொண்ட அறிவிக்க முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தமுறை உயர்தரப் பரீட்சைக்காக முதல் முறையாக கொரிய மொழி பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...