பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள்

Date:

அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களிலும் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவித்ததன் பின்னர், போக்குவரத்து அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும் அறிவிக்கப்பட்டு பஸ்களில் சிசிடிவி கமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கமராக்கள் பொருத்தப்பதுவதன் மூலம் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, பயணிகள் போக்குவரத்து சேவை பஸ்களுக்கு வழங்கப்படும் வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கமராக்கள் பொருத்துவது உரிம நிபந்தனையாக உள்ளடக்குவது தொடர்பான யோசனை பொறுப்பு தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...