செங்கடலை இரத்தக்கடலாக மாற்ற முயற்சி: துருக்கி ஜனாதிபதி குற்றச்சாட்டு

Date:

யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வான்வழித் தாக்குதல் நடத்தியது குறித்து துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹூதி போராளிகள் தேவைக்கு அதிகமாக தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்த நிலையில், ஹூதி போராளிகள் மீது தாக்குதல் நடத்தி செங்கடலை இரத்தக் கடலாக மாற்ற அமெரிக்காவும் பிரிட்டனும் முயற்சிப்பதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தாக்குதலில் இருந்து ஹூதி போராளிகள் தம்மை தற்காத்துக் கொள்கின்றனர் எனவும் எர்டோகன் கூறியுள்ளார்.

அதேவேளை அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தாக்குதலுக்கு பதிலடி வழங்க போவதாக ஹூதி போராளிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக யேமனின் ஹூதி போராளிகள் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது டோர்ன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல்களின் அதிகரிப்புடன், அமெரிக்க மற்றும் பிரித்தானிய விமானப்படையினர் யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல தளங்களை அழித்துள்ளனர்.

Popular

More like this
Related

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...