இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசாங்கம் தயார்: நீதியமைச்சர்

Date:

அண்மையில் அமுல்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளதுடன், சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,

இந்தச் சட்டத்தை பிழையானது என அழைப்பது அர்த்தமற்றது என்றும், சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரினார்.

“இந்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. சில குறைபாடுகளை நாங்கள் அவதானித்துள்ளோம். திருத்தங்களைச் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேவையான திருத்தங்களை நீங்கள் முன்மொழியுங்கள்.

அவற்றை நாங்கள் விவாதிப்போம். அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. பாராளுமன்றத்தில் விவாதித்து தேவையான திருத்தங்கள் இல்லாமல் செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இணையவழி பாதுகாப்புச் சட்டம் பிழையானது என அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதுடன், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை பாராட்டுக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சட்டம் தொடர்பான விவாதங்களுக்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...