76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபை விஷேட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்தன நிலையயத்தில் எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறும்.
தேசிய ஷூரா சபை தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் ,தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பெளத்த ஆய்வுகளுக்கான வல்பொல ராகுல நிலைய பணிப்பாளர் கல்கந்தே தம்மானந்த தேரர் உரை நிகழ்த்தவுள்ளார்.