ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மின்சார விநியோக செலவு அதிகம்: ஆய்வில் தகவல்

Date:

தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வீட்டு மின்சார செலவினங்கள் அதிகமாக உள்ளமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

வெறிட்டே ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட பகுப்பாய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின்சார கட்டணத்தில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மின்சார விநியோக செலவும் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள குடும்பங்கள், ஏனைய தெற்காசிய நாடுகளில் உள்ள மின்கட்டணத்தை விடவும் 2.5 முதல் 3 மடங்கு அதிகமாக மின்கட்டணத்தை செலுத்துகின்றன.

மாதாந்தம் 100 முதல் 300 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் குடும்பங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக வெறிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் 100 அலகு மின்சாரத்தை பெறுவதற்கு 2,078 ரூபாய் செலவிடப்படுகின்ற நிலையில் இலங்கையில் 5,280 ரூபாய் செலவிடப்படுவதாக அந்த நிறுனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இந்த மாதத்தில் திட்டமிடப்பட்ட மின் கட்டண குறைப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த கட்டண குறைப்பு 4 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இது ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மின்கட்டண சிக்கலை குறைந்த அளவிலேயே தீர்க்கும் என வெறிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...