அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழர்களை சந்தித்த ரணில்: முதலீடு செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

Date:

 இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் சில பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளார்.

இலங்கை  பொருளாதார நிலைமைகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் முதலீடு செய்வது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

“நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அவுஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வுகள் பற்றிய எந்தவொரு பேச்சு வார்த்தையும் இன்றி வெறுமனே பொருளாதர அபிவிருத்தி பற்றியே ரணில் விக்கிரமசிங்க பேசியதாக அவுஸ்திரேவியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த புலம்பயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரச்சினை தொடர்பாக சுட்டிக்காட்டிய போதும் அவர் அதனை கருத்தில் எடுக்கவிலலை என்றும் தெரிவிக்கப்டுபகின்றது.

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...