ரஃபா நகரத்தையும் இஸ்‌ரேல் தாக்கினால் பெரும் மனிதப்பேரழிவு ஏற்படும்: ஜ.நா மனிதாபிமான உதவிகள் பிரிவு எச்சரிக்கை

Date:

காஸாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ரஃபா நகரம் மீது இஸ்‌ரேல் படையினர் தாக்குதல் நடத்தினால் பேரழிவு ஏற்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான உதவிகள் தொடர்பான பிரிவின் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

காஸா மீது நடத்தப்படும் மிக கடுமையான தாக்குதல்களால் பலஸ்தீன மக்கள் நிலைகுலைந்திருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இருப்பிடங்கள், உறவினர்கள் மற்றும் உடமைகளை இழந்து சொந்த இடங்களை விட்டு வெளியேறிய பலஸ்தீன மக்கள் ராஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ரஃபா நகரத்தையும் இஸ்‌ரேல் தாக்கினால் பெரும் மனிதப்பேரழிவு ஏற்படும் எனவும் கிரிஃபித்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பான வேறு இடங்களுக்கு செல்ல முடியாது, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்கள் ராஃபாவில் சிக்கியுள்ளதுடன் அவர்கள் போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி தவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ரஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பவது உறுதி எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ரஃபா நகரில் ஹமாஸ்  மக்களுக்கு மத்தியில் பதுங்கி இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாஹூ கூறியுள்ளதுடன் அவர்களை வேறோடு அழிக்க போவதாகவும் அந்த அழிவின் மூலமே காஸா பிரச்சினை முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்படியான சூழ்நிலையில், காஸாவின் ராஃபா நகர் மீது தொடர் தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.

எந்த நேரத்திலும் இஸ்ரேல் மும்முனை தாக்குதலை ஆரம்பிக்கலாம் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உயிர் தப்பிக்க ரஃபா நகரில் தஞ்சமடைந்த பலஸ்தீன மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

தாம் முன்னர் வசித்த பிரதேசங்கள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் தாம் மீண்டும் அங்கு செல்ல போவதாக மக்கள் கூறுகின்றனர்.

மேலும் காஸா நிலப்பரப்பில் எங்குமே பாதுகாப்பான இடங்கள் கிடையாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...