அரசியல் பிரவேசம் உறுதியானது: சினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகர் விஜய்

Date:

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றிகழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் இன்றைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசியல் பிரவேசம் குறித்த வதந்திகளுக்கு மத்தியில் தென்னிந்திய திரைப்பட நடிகர் தளபதி விஜயம் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் அவரது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சி அமைப்பதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து நடிகர் விஜய் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் விஜயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் இன்று விண்ணப்பம் செய்கிறோம்.

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அடிப்படை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களது இலக்கு என்றார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...