‘இலங்கை சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபையின் விசேட நிகழ்வு

Date:

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபை விஷேட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறும்.

தேசிய ஷூரா சபை தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர், தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பெளத்த ஆய்வுகளுக்கான வல்பொல ராகுல நிலைய பணிப்பாளர் கல்கந்தே தம்மானந்த தேரர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு தூதுவர்), அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் [நளீமி] பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைநெறிகள் பீடம் ஜாமிஆ நளீமிய்யா ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்வில் தேசிய நலனில் முஸ்லிம்களின் பங்களிப்பினை பறைசாற்றும் இவ்வரலாற்று நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மஜ்லிஸ் அங்கத்தவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் சமூக நலன் அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...