குப்பி விளக்கை பயன்படுத்தி கல்வி பயிலுமாறு கூறிய அதிகாரி: மன்னிப்புக் கோரிஅறிக்கை

Date:

தான் கூறிய கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றில் அவர் வெளியிட்டிருந்த கருத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்நிலையிலேயே குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

இலவச மின்சாரத்திற்கு மக்கள் பழகிவிட்டதாகவும், தற்போது மாறிவரும் சூழ்நிலையில் அதைக் கையாள முடியாத நிலையில் உள்ளதாகவும், ஆகையினால் பொது மக்களின் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்றும் கூறினார்.

“நாங்கள் ஒன்பது ஆண்டுகளாக மின் கட்டணத்தை அதிகரிக்கவில்லை. தற்போது, ஒரே கட்டமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் ஒரு குழந்தைக்கு கல்வி கற்பதற்கு ஏன் மின்சாரம் தேவை என கேள்வி எழுப்பிய நோயல் பிரியந்த, ஒரு குப்பி விளக்கு போதுமானது என்று கூறினார். அத்துடன், குப்பி விளக்கைப் பயன்படுத்தியே தான் கல்வி கற்றதாகவும் கூறியிருந்தார்.

சம்பாதித்து குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை வழங்கத் தெரிந்திருக்க வேண்டிய பெற்றோரின் தவறுதான் காரணம் என அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

அவரின் இந்த கருத்துகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. பலரும் விசனம் தெரிவித்திருந்தனர். இவ்வாறான பின்னணியிலேயே இவ்வாறு மன்னிப்புக்கோரி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...