கத்தார் நாட்டில் நடைபெறும் 7வது சர்வதேச கிராஅத் (அல்குர் ஆன்) போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த ஹிஷாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிகழ்நிலை (online) மூலம் நடந்த முதற் கட்ட போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 1315 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களிலிருந்து நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தெரிவான 100 பேரில், இலங்கையிலிருந்து ஹிஷாம் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்து கொள்ள இன்று காலை கத்தார் பயணமானார்.