சுமூகமான தீர்வுக்கு பின் வெலி­கம பாரி அரபுக் கல்­லூரி மீண்டும் ஆரம்பம்

Date:

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பு­ரைக்­க­மைய கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் மூடப்­பட்­டி­ருந்த வெலி­கம, கல்­பொக்க மத்­ர­ஸதுல் பாரி அரபுக் கல்­லூரி நேற்று முன்­தி­னம் 30 ஆம் திகதி முதல் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் திறக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­லூ­ரியின் அதிபர் அப்துல் ரஹ்­மான் (மலா­ஹிரி) தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட கல்­லூ­ரியின் மாணவர் ஒருவர் கல்­லூரி ஆசி­ரியர் ஒரு­வ­ரினால் தாக்­கப்­பட்டு காயங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து திணைக்­களம் கல்­லூ­ரியை கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் தற்­கா­லி­க­மாக மூடி­வி­டும்­படி பணித்­தி­ருந்­தது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் வெலி­கம பொலி­ஸாரும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரி­களும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

வெலி­கம பொலிஸார் சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரியர், மாணவர் மற்றும் பெற்­றோரை அழைத்து சமா­தான முயற்­சி­யொன்­றினை முன்­னெ­டுத்து வெற்­றியும் கண்­டனர்.

இவ்­வி­வ­காரம் சுமு­க­மாக தீர்த்து வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து திணைக்­களம் அரபுக் கல்­லூ­ரியின் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்கு மீண்டும் அனு­மதி வழங்­கி­ய­தை­ய­டுத்தே கல்­லூரி திறக்­கப்­பட்­டுள்­ளது.

ஆசி­ரி­யரால் தாக்­கப்­பட்டு காயங்­க­ளுக்­குள்­ளான மாணவர் வெலி­கம – பாரி அர­புக்­கல்­லூ­ரிக்கு அண்­மை­யி­லுள்ள பிறிதோர் மத்­ர­ஸாவில் இணைந்து கல்­வியைத் தொடர்­வ­தாக பாரி அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் அப்துல் ரஹ்மான் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

பதவி நீக்கம் செய்­யப்­பட்ட ஆசி­ரி­யரை மீண்டும் இணைத்துக் கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. கல்லூரியின் பணிப்பாளர் சபையே தீர்மானம் மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...