ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அவுஸ்ரேலியா சென்றுள்ளார். குறித்த மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவும் உள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனும் இந்தப் பயணத்தில் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.
இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அங்கு ஆராயவுள்ளார்.