இலங்கை தேசிய சமாதானப் பேரவை 03 வருடங்களாக தேசிய நல்லிணக்கத்திற்காக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி ‘நல்லிணக்கத்திற்காக மதங்கள்- உள்வாங்கிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளில் இன்று (28) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், எரான் விக்கிரமரத்ன கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக வருகைத்தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தேசிய சமாதான சபையின் தலைவர் ஜெஹான் பெரேரா வரவேற்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது நல்லிணக்கத்தில் இறுதிப் பகுதியை நடைமுறைப்படுத்துவது மட்டுமே உள்ளது. அதற்கு இன்னும் சில பிரச்சினைகள் மட்டுமே தீர்க்கப்பட வேண்டி உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேவேளை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உரையாற்றும் போது, குருந்தூர் மலை பகுதியில் அண்மையில் ஏற்பட்ட மோதல் பாரிய அனர்த்தமாக மாறியிருக்கலாம் ஆனால் அனைத்து தரப்பினருடனும் பேசி இன்று தீர்வு கிடைத்துள்ளது.
அதன்படி, அமைச்சின் தலையீட்டில் அந்த பகுதியில் இந்துக் கோயிலையும் விகாரையொன்றையும் நிர்மாணக்க புத்தசாசன அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கான ஜேர்மன் தூதுவராக கடமையாற்றும் பீலிக்ஸ் நியூமன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கருத்துத் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரேயல் அஷ்ரோப், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, ஆகியோரும் உரையாற்றினார்கள்.
இந்கழ்வில் பௌத்த மற்றும் இந்து, முஸ்லிம் மதத் தலைவர்கள் கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் உட்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
கலாநிதி பூஜ்ய பல்லே கந்தே ரத்தினசார மகாநாயக்க தேரர் மற்றும் கலாநிதி மாதம்பகம அஸ்ஸஜி தேரர் ஆகியோருக்கு தேசிய சமாதான சபையினால் நாட்டின் சமாதானத்திற்காக அவர்கள் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.