நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

Date:

வரட்சி காலநிலையால் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (WSDB) களனி ஆற்றின் குறுக்கே உப்புத் தடுப்பை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

தடுப்புச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே இடம்பெற்று வருவதாக பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், “தற்போதைக்கு நீர் கொள்ளளவை பயன்படுத்தி நீர் விநியோகம் தொடரும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் நீர் ஆதாரங்களில் நீடித்த வரட்சியான காலநிலையின் தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரட்சியான காலநிலையால் “தண்ணீர் நுகர்வு அதிகரித்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், நுகர்வோரை “நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...