புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதிக்கான பிரவேச பரீட்சை!

Date:

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரிக்கு 2024ம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான பிரவேச பரீட்சை மார்ச் மாதம் 10 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 க்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

பரீட்சையில் கலந்து கொள்பவர்களுக்கான தகைமைகள், 2024 அரசாங்க அல்லது தனியார் பாடசாலை ஒன்றில் தற்போது 9ம் தரத்தில் தமிழ் மொழியில் கற்றுக்கொண்டிருத்தல்.

ஷரீஆ துறை கல்வியையும் பாடசாலை கல்வியையும் சேர்த்து கற்பதில் ஆர்வமும் திறமையும் இருத்தல்.

பிரவேசப்பரீட்சையில் சித்திபெறுவோர் குறித்த பாடநெறிகளை கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றி உள்நாட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை பெறுவதற்கு ஏழு ஆண்டுகளில் தகைமை பெறுவர்.

க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகள், அல் ஆலிம் மற்றும் மௌலவி (சாதாரண தரம், உயர் தரம்), தர்மாசார்யா மற்றும் அஹதிய்யா, அரபு , தமிழ் , ஆங்கிலம் , சிங்களம் மொழிகள், தொழிற்பயிற்சி பாடங்கள் ஆகியனவாகும்.

பரீட்சையில் கலந்து விருப்பமுடையவர்கள் தான் கற்கும் தரத்தை உறுதிப்படுத்திய பாடசாலை அதிபரின் கடிதத்துடன் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் 0322265738/ 0774257372 / 0774377788.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...