15ஆம் திகதிக்கு முன் ஹஜ் யாத்திரிகர்கள் திணைக்­களத்தில் பதிவு செய்து கொள்ளவும்

Date:

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக  புதன்­கி­ழமை வரை 2630 பேரே விண்­ணப்­பித்­துள்­ளார்கள் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளம் தெரிவித்துள்ளது.

இவ்­வ­ருட ஹஜ் விசா எதிர்­வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சவூதி ஹஜ் உம்ரா அமைச்­சினால் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளதால் எதிர்­வரும் 15 ஆம் திக­திக்கு முன் ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களத்தில் தங்­களைப் பதிவு செய்து கொள்­ளு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

இறுதி நேர நெருக்­க­டி­களைத் தவிர்ப்­ப­தற்­காக ஹஜ் யாத்­தி­ரைக்கு திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் தாம­தி­யாது 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­ட­ணைத்தைச் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்டு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அனு­மதிப் பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ் முகவர் நிலை­யங்­களைத் தொடர்பு கொண்டு பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் படி ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் தலைவர் ஏ.சி.பி.எம்.கரீம் வேண்­டு­கோள் ­வி­டுத்­துள்ளார்.

திணைக்­க­ளத்­தினால் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள 93 ஹஜ் முக­வர்­களின் பெயர் பட்­டியல் மற்றும் விப­ரங்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முகநூல் பக்கம் மற்றும் இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தெ­னவும் அவர் கூறினார்.

எதிர்­வரும் மார்ச் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 25ஆம் திகதி வரை சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு ஹஜ் விசாக்களை விநியோகிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...