9ஆவது பாராளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் இன்று

Date:

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று(07) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் புதிய கொள்கை விளக்க உரையை காலை 10.30 க்கு நிகழ்த்தி கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...