இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடத் தீர்மானம்!

Date:

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் அமைச்சரவையின் அனுமதியுடன் கைச்சாத்திடுவதற்கான  ஏற்படுகள் நிறைவிற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஏப்ரல் மாதம் குறித்த ஒப்பந்தம் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2 மாதங்களுக்குள், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை நிறைவுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகள் இடைவெளியின் பின்னர் இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு எட்கா ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையினை ஆரம்பித்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று அமைச்சரவை அனுமதியின் பின்னர் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...