கெஹலியவுக்கு சிஐடி ஆஜராகுமாறும் உத்தரவு: வெளிநாடு செல்லவும் தடை

Date:

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது.

ரம்புக்வெல்ல நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகவிருந்தார்.

எனினும், மற்றுமொரு வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக வேண்டியிருந்தமையால் அவர் ஆஜராகத் தவறியிருந்தார்.

இதனால் அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வேறு திகதி கோரியுள்ளதாக கோரியிருந்தார்.

இந்நிலையிலேயே கொழும்பு, மாளிகாந்த நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பாக சத்தியக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 10 சிவில் சமூக ஆர்வலர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்தது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...