சாந்தன் நாடு திரும்புவதற்கு எந்தத் தடையும் இல்லை: அலி சப்ரி

Date:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இருநாடுகளிலும் இருந்து சாந்தன் இலங்கை திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், அவர் நாடு திரும்புவதில்லை எவ்வித தடையும் இல்லை என்பதுடன், இலங்கை அரசாங்கம் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, எந்த சந்தர்ப்பத்திலும் சாந்தனுக்கு நாடு திரும்ப முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...