பாகிஸ்தான் பொதுத் தேர்தல்: இம்ரான்கான் கட்சி முன்னிலையில்..!

Date:

பாகிஸ்தானில் நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இம்ரான் கான் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும் எனவே அக்கட்சி பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

இதன்படி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி 154 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பாகிஸ்தானை பொறுத்தவரை முன்னாள் பிரதமர்களான இம்ரான்கானின தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, நவாஸ் ஷெரீப்பின்  பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில் நேற்று  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதேபோல் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.

இதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரத்து 582 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 65 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக முக்கிய இடங்களில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு  வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

இதில், இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர்  அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாதக அக்கட்சியினர் கூறியுள்ளனர்.

பல இடங்களில் தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்து இருப்பதாகவும் பிடிஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இம்ரான்கானின் பிடிஐ சின்னத்திற்கு பேட் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனால், இம்ரான் கான் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...