பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 14 இடங்களில் வெற்றி

Date:

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 024 வாக்குகள் பெற்றுள்ளார். இதுவரை 37 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதில் நவாஷ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 9 இடங்கிளில் வெற்றி பெற்றுள்ளது.

265 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 133 இடங்களை தேவை.

பாகிஸ்தானில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாதுகாப்பை நிலைமை கருத்தில் கொண்டு இணைய தள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.

தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

வாக்கி எண்ணிக்கை தொடங்கி நீண்ட நேரமாகியும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் இம்ரான் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையம் மீது குற்றஞ்சாட்டினர்.

மேலும், முடிவுகள் தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர். அதன்பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி பெற்ற இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 024 வாக்குகள் பெற்றுள்ளார். இதுவரை 37 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதில் நவாஷ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 9 இடங்கிளில் வெற்றி பெற்றுள்ளது.

265 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 133 இடங்களை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...